/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு
/
அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு
அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு
அரவக்குறிச்சியில் சேவல் சண்டைஇருவர் கைது; இருவர் தலைமறைவு
ADDED : ஏப் 15, 2025 06:23 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில், சேவல் சந்தையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இருவர் சேவல்களுடன் தப்பி ஓடினர்.
அரவக்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அரவக்குறிச்சி போலீசார் வடுகப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செல்வராஜ் என்பவரது தோட்டத்தின் அருகே சேவல் சண்டை நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அரவக்குறிச்சி அருகே உள்ள மீனாட்சி வலசை சேர்ந்த செல்வராஜ், 51, அரவக்குறிச்சி நாடார் தெருவை சேர்ந்த ஜெகதீசன், 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த அஜித்-குமார், 30, அக்னி, 30, ஆகிய இருவரும் சேவல்களுடன் தப்பி ஓடினர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரை தேடி வருகின்றனர்.