/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது
/
இரு பைக்குகள் திருட்டு: ஒருவர் கைது
ADDED : மே 05, 2024 02:20 AM
கரூர்:கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பைக்குகளை திருடியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 28; இவர் கடந்த,
1ல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பஜாஜ்
பிளாட்டினம் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதை காணவில்லை. அதேபோல்,
தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த ரமேஷ், 35; என்பவர் கடந்த, 2 ல் பஜாஜ்
டிஸ்கவர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். அதையும் காணவில்லை. இது
குறித்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்தனர்.
அப்போது, இரண்டு பைக்குகளை திண்டுக்கல் மாவட்டம்,
சின்னமந்தை பகுதியை சேர்ந்த பாலமுருகன், 36; என்பவர் திருடியது
தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.