/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டையில் ரயில் மோதி இருவர் உயிரிழப்பு
/
லாலாப்பேட்டையில் ரயில் மோதி இருவர் உயிரிழப்பு
ADDED : செப் 20, 2025 01:51 AM
குளித்தலை, லாலாப்பேட்டை ரயில்வே பாதையில் ரயில் மோதி, இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காந்தி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அன்னக்கிளி, 52. இவர் நேற்று காலை லாலாப்பேட்டை அருகே உள்ள, சிந்தலவாடியில் தனது தாய் வீட்டிற்கு வந்தார். பின்னர், லாலாப்பேட்டை ரயில்வே பாதையில், இரட்டை கைகாட்டி பகுதியில் காலை 10:30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அன்னக்கிளி பலியானார்.
ரயில் மோதி பெண் பலியான சடலத்தை பார்க்கச் சென்ற, புனவாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சலவை தொழிலாளி ராஜலிங்கம், 45, காது கேட்காத, வாயும் பேசாதவர். இவர் ரயில்வே பாதையில் நடந்து வரும்போது மதியம், 12:30 மணியளவில் பாலக்காட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே
பலியானார்.
கரூர் ரயில்வே போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.