/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம்
/
கார் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம்
ADDED : டிச 20, 2024 12:57 AM
அரவக்குறிச்சி, டிச. 20-
அரவக்குறிச்சி அருகே, கார் கவிழ்ந்து இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் பெரிய ஏரி அருகே உள்ள முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சிவநாதன், 38. இவரது மகன் நமச்சிவாயம், 9. இருவரும் காரில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அரவக்
குறிச்சி, இந்திரா நகர் பிரிவு அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் நமச்சிவாயம், சிவநாதன் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு சிவநாதனை கோவை தனியார் மருத்துவமனையிலும், நமச்சிவாயத்தை கரூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.