ADDED : ஆக 01, 2025 09:53 PM
திருச்சி:தேக்கமலை, கோவில்பட்டி பிரிவு அருகே, இரு பைக்குகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.
கரூர் மாவட்டம், வாழ்வார்மங்கலத்தை சேர்ந்த முருகேசன், 62, மேலவெளியூரை சேர்ந்த முத்து, 67, ஆகியோர், நேற்று காலை, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் தோகைமலை அருகே கோவிலுக்கு சென்று விட்டு, சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருச்சி -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தேக்கமலை, கோவில்பட்டி பிரிவு அருகே சென்ற போது, மணப்பாறை அருகே உள்ள அனியாப்பூரை சேர்ந்த வடிவேல், 39, என்பவர் ஓட்டி வந்த, 'ஹோண்டா சைன்' பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே முருகேசன் இறந்தார். அவருடன் சென்ற முத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
காயமடைந்த வடிவேல், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.