/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரு சாலை விபத்துகளில் இருவர் பரிதாப பலி
/
இரு சாலை விபத்துகளில் இருவர் பரிதாப பலி
ADDED : ஜூன் 03, 2025 01:08 AM
குளித்தலை,குளித்தலை அடுத்த, மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன், 21, கட்டட தொழிலாளி. இவர், தனக்கு சொந்தமான பைக்கில் நேற்று முன்தினம் இரவு, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்றார். குளித்தலை அருகே வரும்போது, கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற டாடா ஏசி சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லோகநாதன் பலியானார்.
குளித்தலை போலீசார், லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரக்கு வாகன டிரைவர் கும்பகோணம் நீடாமங்கலத்தை சேர்ந்த கார்த்திக், 30, என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகரை சேர்ந்த பொறியாளர் செந்தில்குமார். இவரது மனைவி தேன்மொழி,48. இவர், தனது தாய் ஊரான வீரவள்ளி வந்துவிட்டு, தனது வீட்டுக்கு திம்மாச்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக காத்திருந்தார். அப்போது, திருச்சி மாவட்டம் எஸ்.புதுக்கோட்டையை சேர்ந்த அம்பேத்கர், 57, என்பவர் காரில் கரூர் நோக்கி சென்றார். அப்போது கார் அதிவேகமாக வந்து தேன்மொழி மீது மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.
லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.