/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல், க.பரமத்தியில் இரண்டு பேர் மாயம்
/
வாங்கல், க.பரமத்தியில் இரண்டு பேர் மாயம்
ADDED : நவ 05, 2024 01:31 AM
வாங்கல், க.பரமத்தியில்
இரண்டு பேர் மாயம்
கரூர், நவ. 5-
கரூர் மாவட்டம், வாங்கல், 16 கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 67; இவர் கடந்த அக்., மாதம், 24 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. மேலும், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் அன்பழகன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அன்பழகனின் மகன் சந்துரு,38; போலீசில் புகார் செய்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் மாவட்டம், க.பரமத்தி வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி, 38; கட்டிட தொழிலாளி. இவர் கடந்த அக்., 30 ல் ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், ரவியின் மனைவி பரிமளா,37; போலீசில் புகார் செய்தார்.
க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.