/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் திருச்சி மார்க்கத்தில் பஸ் ஏற முடியாமல் தவிப்பு
/
மழையால் திருச்சி மார்க்கத்தில் பஸ் ஏற முடியாமல் தவிப்பு
மழையால் திருச்சி மார்க்கத்தில் பஸ் ஏற முடியாமல் தவிப்பு
மழையால் திருச்சி மார்க்கத்தில் பஸ் ஏற முடியாமல் தவிப்பு
ADDED : அக் 15, 2024 07:21 AM
குளித்தலை: கோவை, கரூர் மார்க்கத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுகை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், அரசு மற்றும் தனியார் பஸ்கள், குளித்தலை காந்திசிலை எதிரே உள்ள நிழற்கூடத்தில் பஸ்கள் நிறுத்தம் செய்யாததால், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் கொட்டும் மழையில் கடை ஓரங்களில் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
போக்குவரத்து பணிமனை நிர்வாகம் மற்றும் நகராட்சி, போக்குவரத்து போலீசார், திருச்சி மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும், நிழற்கூடத்தில் நிறுத்தி பொது மக்களை ஏற்றியும், இறக்கியும் செல்லவேண்டும் என, பொது மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.