/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
/
பஸ் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
ADDED : ஜன 28, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூரில், அரசு பஸ் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 40, அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம், கரூர்-கோவை சாலை இ.பி., அலுவலகம் அருகே, அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த, 40 வயது அடையாளம் தெரியாத வாலிபர் மீது, அரசு பஸ் மோதியது. அதில், நடந்து சென்றவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, கரூர் எல்.என்.எஸ்., பகுதி வி.ஏ.ஓ., குப்புசாமி, 45, கொடுத்த புகார்படி, அரசு பஸ் டிரைவர் மோகன்ராஜ் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.