/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய அமைச்சர் கொடும்பாவி எரிப்பு
/
மத்திய அமைச்சர் கொடும்பாவி எரிப்பு
ADDED : மார் 11, 2025 06:59 AM
கரூர்: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொடும்பாவியை, கரூரில் தி.மு.க.,வினர் எரித்தனர்.
லோக்சபாவில் மும்மொழி கல்வித்திட்டம் குறித்து, தி.மு.க., எம்.பி.,க்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க.,வினர் நாகரிகமற்றவர்கள் என தெரிவித்தார். அதை கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே, தி.மு.க.,வினர் மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி தலைமையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொடும்பாவியை எரித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, மண்டல தலைவர்கள் ராஜா, சக்திவேல், பகுதி துணை செயலாளர் வெங்கட்ராமன், செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.