/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான சமுதாய கூடம் பராமரிப்பு செய்ய வலியுறுத்தல்
/
மோசமான சமுதாய கூடம் பராமரிப்பு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூலை 12, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் :சேங்கல் பஞ்சாயத்து சமுதாய கூடத்தின் கட்டடம் மோசமான நிலையில் காணப்படுகிறது.கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சேங்கல் பஞ்சாயத்து பகுதியில் சமுதாய கூடம் உள்ளது. இங்கு இப்பகுதி மக்கள், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
தற்போது சமுதாய கூடத்தின் மேற்பகுதி கான்கிரீட் உதிர்ந்தும், இரும்பு கம்பிகள் தெரியும் வகையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் நடத்தும் போது, மக்கள் அச்சத்துடனேயே கலந்து கொள்கின்றனர். எனவே, சமுதாய கூடம் கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் செய்து, மக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

