/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் ஸ்டாண்ட் வெளியே சிறுநீர் கழிப்பிடம் தேவை
/
பஸ் ஸ்டாண்ட் வெளியே சிறுநீர் கழிப்பிடம் தேவை
ADDED : டிச 11, 2024 01:33 AM
பஸ் ஸ்டாண்ட் வெளியே
சிறுநீர் கழிப்பிடம் தேவை
குளித்தலை, டிச. 11-
குளித்தலை பஸ் ஸ்டாண்ட் வெளியே, இயற்கை உபாதைகளை கழிக்க சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.
குளித்தலை பஸ் ஸ்டாண்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சிறிய பஸ் ஸ்டாண்டாக இருப்பதால், பயணிகளை இறக்கிய பின் உடனே புறப்பட்டு விடுகிறது. பஸ் ஸ்டாண்டுக்குள் சிறுநீர் கழிக்க கழிப்பிட வசதி உள்ளது. அதேசமயம் கோவை, திருப்பூர், கரூர் மார்க்கத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுகை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் நுழையாமல் வெளியே நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.
இதனால் அரசு, தனியார் பஸ் பயணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள் சிறுநீர் கழிக்க இட வசதியின்றி தவிக்கின்றனர். முன்பு, பஸ் ஸ்டாண்ட் வெளியே கழிப்பிட வசதி இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, கழிப்பிடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் இயற்கை உபாதைக்கு தவிக்கின்றனர். எனவே
பஸ் ஸ்டாண்ட் வெளியே, சிறுநீர் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.