/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பண்டரிநாதன் கோவிலில் 17ல் உரியடி திருவிழா
/
பண்டரிநாதன் கோவிலில் 17ல் உரியடி திருவிழா
ADDED : ஆக 10, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் பண்டரிநாதன் கோவிலில் வரும், 17ம் தேதி, 103 வது ஆண்டு உரியடி திருவிழா நடக்கிறது.
நாடு முழுவதும் வரும், 17ல் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. அதையொட்டி, கரூர் பண்டரிநாதன் கோவிலில் இரவு, 7:00 மணிக்கு பாண்டுரங்கராஜ விட்டல் நாதரை எழுந்தருள செய்து, உரியடி, வழுக்கு மரம் ஏறும் விழா நடக்கிறது.
மேலும் அன்று மாலை, 6:00 மணி முதல் இரவு, 6:30 மணி வரை கிருஷ்ணர் - ராதை வேடமிட்டு கோவிலுக்கு வரும், ஆறு வயதுக்குட்பட்ட, 200 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.