/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அபய பிரதான ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் திருவீதி உலா கோலாகலம்
/
அபய பிரதான ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் திருவீதி உலா கோலாகலம்
அபய பிரதான ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் திருவீதி உலா கோலாகலம்
அபய பிரதான ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் திருவீதி உலா கோலாகலம்
ADDED : மே 08, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், அபயபிரதான ரெங்கநாதர் கோவில், சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று இரவு உற்சவர் திருவீதி உலா நடந்தது.
கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழா கடந்த, 2 முதல் நடந்து வருகிறது. நேற்று இரவு யானை வாகனத்தில் உற்சவர் ரெங்கநாதர், கருட வாகனத்தில் கல்யாண வெங்கடரமண சுவாமியின் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
இன்று மாலை, 4:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 10ல் தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.