/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3.24 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் தகவல்
/
3.24 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் தகவல்
3.24 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் தகவல்
3.24 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி: கலெக்டர் தகவல்
ADDED : நவ 12, 2024 07:02 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், 3.24 லட்சம் வெள்ளாடு, செம்மறி ஆடுக-ளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம், டிச.,10 வரை அனைத்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு இலவசமாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக, மூன்று லட்சத்து, 24 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு மாவட்டம் முழுவதிலும் உள்ள செம்மறி ஆடுகள், ஒரு லட்சத்து, 80 ஆயிரத்து, 900, வெள்-ளாடுகள், ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து,100 என மொத்தம் மூன்று லட்சத்து, 24 ஆயிரம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
ஆட்டுக்கொல்லி நோய் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை தாக்கும் வைரஸ் நோயாகும். பாதித்த ஆடுகளில் அதிக காய்ச்சல், சளி, கண்களில் நீர் வடிதல், கழிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்-படும். இந்நோய் ஆடுகளில், 90 சதவீதம் இறப்பை ஏற்படுத்தும். இதற்காக, அனைத்து ஆடுகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலவசமாக தடுப்பூசி போடப்-படும்.சென்ற ஆண்டு, முதல் சுற்றில் அனைத்து ஆடுகளுக்கும் தடுப்-பூசி போடப்பட்டது. இந்த ஆண்டும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு தொடர்ந்து, 30 நாட்களுக்கு கிராம அளவில் முகாம் அமைத்து, மருத்துவக்குழு மூலம் தடுப்பூசி போடப்படவுள்ளது. இது குறித்து முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து கிராமங்-களில் தடுப்பூசி போடப்படும்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.