/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வரும் 16 முதல் துவக்கம்
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வரும் 16 முதல் துவக்கம்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வரும் 16 முதல் துவக்கம்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வரும் 16 முதல் துவக்கம்
ADDED : டிச 11, 2024 01:44 AM
கால்நடைகளுக்கு கோமாரி நோய்
தடுப்பூசி வரும் 16 முதல் துவக்கம்
கரூர், டிச. 11-
டிச., 16 முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், வரும் 16 முதல், ஜன., 5 வரை பசு மற்றும் எருமையினங்களுக்கு இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி ஆறாவது சுற்று போடும் பணி நடக்கிறது.
இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். இதனால், கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு நேரிடுகிறது. இந்த நோயை தடுக்கும் வகையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு, எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. 75 குழுக்கள் மூலம் மூன்று மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். இதுகுறித்து முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். தடுப்பூசி போடப்படும் நாளில், கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.