/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான நிலையில் வல்லம் சுகாதார மையம்
/
மோசமான நிலையில் வல்லம் சுகாதார மையம்
ADDED : ஆக 29, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: வல்லம் கிராமத்தில் உள்ள, சுகாதார வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வல்லம் கிராமத்தில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மையத்தின் வெளிப்புற பகுதியில், அதிகமான செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி தருகிறது. உள்புறங்களில் வளாகம் முழுவதும் சிதலமடைந்து கதவுகள் பாதிக்கப்பட்டு, மோசமாக இருக்கிறது.
இதனால் வளாகத்தை, மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை சரி செய்து மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

