ADDED : டிச 16, 2025 05:53 AM
சத்தியமங்கலம்: ஆசனுாரில் இருந்து கோவை மாவட்டம் காரம-டைக்கு, சோளத்தட்டு ஏற்றிய ஈச்சர் வேன் நேற்று காலை புறப்பட்டது. சத்தி அருகே கெஞ்ச-னுாரை சேர்ந்த தங்கவேல், 42, ஓட்டினார். திம்பம் மலைப்பாதையில் மதியம், 12:00 மணியளவில், 26வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்-தது. டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். வேனை அப்புறப்படுத்திய பிறகு, 2:30 மணிய-ளவில் பிறகு, மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது.
* கர்நாடக மாநிலத்தில் இருந்து தென்னை மட்டை ஏற்றிய ஒரு லாரி, பர்கூர் மலைப்பகுதி வழியாக நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. கரூர், ராயனுார், கே.கே.நகர் கார்த்திக், 30, ஓட்டி வந்தார். அதிகாலை, 3:30 மணிக்கு வரட்டுப்-பள்ளம் அணை அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மீது கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் தப்-பினார்.

