/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி
/
வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி
வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி
வாணிப கழக குடோனில் குண்டும் குழியுமான சாலையால் அவதி
ADDED : மே 08, 2024 05:27 AM
கரூர் : கரூர் அருகே, வாணிப கழக குடோனில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-திருச்சி பழைய சாலை தொழிற்பேட்டையில், தமிழ்நாடு வாணிப கழகத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. அதில் டாஸ்மாக் குடோன் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை அனுப்புவதற்கான குடோனும் உள்ளது. வாணிப கழக குடோனில் சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து லாரி, வேன் டிரைவர்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், டிரைவர்கள் வாகனங்களை எளிதாக ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்யும் போது, குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால் சுமை துாக்கும் தொழிலாளர்கள், குடோன் பணியாளர்கள் பகல் நேரத்தில் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.
எனவே, தமிழக வாணிப கழக குடோனில் உள்ள சாலைகளை, உடனடியாக சீரமைக்க கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

