sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'நீண்டகால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உரு-வாக்கும்' மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து

/

'நீண்டகால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உரு-வாக்கும்' மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து

'நீண்டகால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உரு-வாக்கும்' மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து

'நீண்டகால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை உரு-வாக்கும்' மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து


ADDED : பிப் 02, 2025 03:29 AM

Google News

ADDED : பிப் 02, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி, வலுவான அடித்தளத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக உள்ளது' என, பல்வேறு சங்க நிர்வா-கிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன மாநில செயலாளர், எ.சி.மோகன்: மத்திய அரசின் பட்ஜெட் நடுத்தர மக்கள், விவசா-யிகள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிதி ஆண்டு நெல் சாகுபடியில் அதிக உற்பத்தியை விவசாயிகள் செய்துள்ளனர். அவர்களை ஊக்-குவிக்கும் வகையில், கிசான் கடன் அட்டையில் கடன் பெற, 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் உயர்த்தி இருப்பது வர-வேற்கலாம். இதன் காரணமாக விதைகள் மற்றும் உரம் வாங்க ஏதுவாக இருக்கும். புதிய வேளாண் திட்டம் மூலம், 1.7 கோடி விவசாயிகளை கொண்டு, 100 மாவட்டத்தில் உற்பத்தியை அதிக-ரிக்க போகும் திட்டம் அறிவித்தது நல்ல தகவல். தமிழகத்தில் எந்த மாவட்டம் தேர்வு செய்து உள்ளார்கள், திட்டம் எவ்வாறு செயல்பட உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மருத்துவ துறையில், 36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு முற்றிலும் இறக்குமதி, வணிக வரி ரத்து, காப்பீடு துறையில், 100 சதவீதம் அந்நிய முதலீடு ஆகியவை சிறந்த அம்சமாகும்.கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்: பட்ஜெட்டில் தனிநபர் வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றம், ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவற்றை ஊக்ககுவிப்பதாக அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, அனைத்து சமூகம், அனைத்து துறைகளையும் உள்ளடக்கி சமநி-லையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயம், சிறு மற்றும் குறு தொழில்கள், முதலீடு, ஏற்றுமதி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கி-யத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. பருத்தி உற்-பத்தித் திட்டம் இந்திய ஜவுளி தொழில்துறைக்கு பெரும் ஆதர-வாக அமையும். இது அதிக மகசூல் தரத்துடன் சிறந்த மூலப்பொ-ருள்களை வழங்கி, இந்திய ஜவுளி தொழிலை உலக சந்தையில், போட்டியிடும் திறன் பெற்றதாக மாற்றும். முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கான, 2-5 கோடி ரூபாய் வரை வங்கி கடன், பழங்குடியினர், பட்டியல் இனத்தவர், பெண் தொழில் முனைவோர்களுக்கான திட்டங்கள் ஆகியவை தொழில்துறை விருத்திக்கு பயனுள்ளதாக இருக்கும். தொழில், தொழில்மு-னைவோர், ஏற்றுமதி வளர்ச்சி, எளிய தொழில் செயல்பாடு, கட்-டுமானம், நிதி உதவி உள்பட பல்வேறு திட்டங்களுடன் இந்தி-யாவின் நீண்டகால வளர்ச்சி, வலுவான அடித்தளத்தை உரு-வாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

தமிழ்நாடு தங்கம் வெள்ளி வைரம் நகை வியாபாரிகள் சம்மே-ளன மாநில செயலாளர் ரவீந்திரகுமார்: நடுத்தர மக்கள் வருமான வரி, ஜி.எஸ்.டி., குறித்து நிவாரணம் எதிர்பார்த்துக் கொண்டிருந்-தனர். இத்தகைய பொருளாதார சூழ்நிலையில், 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்ற அறிவிப்பு சிறப்பா-னது. ஒருவருக்கு, 12 லட்சம் ரூபாய் வரை, வருவாய் இருந்தால் அவருக்கு வரி கிடையாது. அது ரிபேட் என்ற கணக்கில் வந்து விடும். அதற்கு மேல் ஒருவருக்கு வருவாய் இருந்தால், அவர் வருமானத்தை பொருத்து, ஸ்லாப் கணக்கில் வந்து விடுவார். இந்த அறிவிப்பு, நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்-றுள்ளது. இதன் மூலம் மக்கள் கையில் பணம் புழக்கம் அதிக-ரிக்கும் நுகர்வுக்கு அதிகம் செலவு செய்வர். மூத்த குடிமக்களுக்கு வரக்கூடிய வட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போனால், டி.டி.எஸ்., பிடித்தம் என்று இருந்ததை ஒரு லட்சம் ரூபாயாக மாற்றியுள்ளனர்.

கரூர் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கி-ணைப்பாளர் ஆர்.குப்புராவ்: இளைஞர் முன்னேற்றம், வேளாண், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்-னேற்றத்துக்கான முத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்விக்கும், மருத்துவ கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவித்து இருப்பது பாராட்டுகுரியது. மொபைல், மின்சார வாகனங்களில் பயன்படுத்துவதற்கான லித்தியம் பேட்டரிகள் ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டிருப்பது சாதகமான பயன்களை வழங்கும். கடல் போக்குவரத்து மேம்பாட்டு நிதி, கப்பல் போக்-குவரத்து துறையை மேம்படுத்தி இந்தியாவை ஒரு முக்கியமான சர்வதேச வர்த்தக மையமாக மாற்றும். ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், விமான சரக்கு கிடங்குகள் மேம்பாடு ஆகியவை இந்-திய உற்பத்தித் தயாரிப்புகளை உலக சந்தையில் எளிதில் நுழைய உதவும்.

காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம்: எண்ணெய் மற்றும் பருப்பு வகை உற்பத்தி பெருக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் துவரை, உளுந்து உள்-ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். பீகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்-நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்-கப்படும் என்பன உள்பட, 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்திற்கு என்று தனியாக திட்ட அறிவிப்பு இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழகம் செயலாளர் வெங்கட்ராமன்: சிறு குறு வணிக நிறுவனங்கள் வாடகைதாரர்கள் டி.டி.எஸ் பிடித்தம், 2.5 லட்சம் ரூபாயிலிருந்து, 6 லட்சம் ரூபா-யாக உயர்த்தி இருப்பது சிறு,குறு தொழில் முனைவோருக்கு பய-னுள்ளதாக உள்ளது. தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், 30,000 ரூபாய் வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை வழங்கப்படும் என்-பது வரவேற்க கூடியது. மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி வசூல், ஒரு லட்சம் கோடி வசூலான பிறகு வணிகர்களுக்கு படிப்படியாக பல்வேறு வரி சலுகைகள், அத்தியாவசிய பொருள் மீது வரி, 5 சதவீதம் நீக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. தற்போது, இரண்டு லட்சம் கோடியை ஜி.எஸ்.டி., வரி வசூல் நெருங்கி கொண்டு உள்ள சூழ்நிலையிலும், வரியில் மாற்றம் குறித்து அறி-விப்பு இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.






      Dinamalar
      Follow us