/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.36.71 லட்சத்துக்கு பல்வேறு விளை பொருட்கள் விற்பனை
/
ரூ.36.71 லட்சத்துக்கு பல்வேறு விளை பொருட்கள் விற்பனை
ரூ.36.71 லட்சத்துக்கு பல்வேறு விளை பொருட்கள் விற்பனை
ரூ.36.71 லட்சத்துக்கு பல்வேறு விளை பொருட்கள் விற்பனை
ADDED : டிச 12, 2024 01:51 AM
கரூர், டிச. 12-
சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 36.71 லட்சம் ரூபாய்க்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கரூர், க.பரமத்தி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களை நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
இதன்படி, 9,728 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 34.69 ரூபாய், அதிக பட்சமாக, 47.25 ரூபாய், சராசரியாக, 42.65 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,861 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 1 லட்சத்து, 13 ஆயிரத்து, 691 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 139.89 ரூபாய், அதிகபட்சமாக, 141.79 ரூபாய், சராசரியாக, 140.79 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 94.92 ரூபாய், அதிகபட்சமாக, 141.29 ரூபாய், சராசரியாக, 120.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 13 ஆயிரத்து, 244 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 16 லட்சத்து, 70 ஆயிரத்து, 64 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. எள் சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 107.88 ரூபாய், அதிகபட்சமாக, 134 ரூபாய், சராசரியாக, 127 ரூபாய், வெள்ளை ரகம் ஒரு கிலோ அதிகபட்சமாக, 134 ரூபாய், சராசரியாக, 128 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 14 ஆயிரத்து, 919 கிலோ எடையுள்ள எள், 16 லட்சத்து, 85 ஆயிரத்து, 203 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 34 லட்சத்து, 68 ஆயிரத்து, 958 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், ஒரு கிலோ நிலக்கடலை குறைந்தபட்சமாக, 65.40 ரூபாய், அதிகபட்சமாக, 71.66 ரூபாய், சராசரியாக, 67.21 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 3,003 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 2,986 ரூபாய்க்கு விற்பனையானது.
மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை சேர்த்து, 36 லட்சத்து, 71 ஆயிரத்து, 944 ரூபாய்க்கு விற்பனையானது.