/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஸ் பாடி நிறுவனங்களில் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் வி.சி., கட்சி மனு
/
பஸ் பாடி நிறுவனங்களில் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் வி.சி., கட்சி மனு
பஸ் பாடி நிறுவனங்களில் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் வி.சி., கட்சி மனு
பஸ் பாடி நிறுவனங்களில் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் வி.சி., கட்சி மனு
ADDED : நவ 19, 2024 01:32 AM
பஸ் பாடி நிறுவனங்களில் பாதுகாப்பு
கரூர் கலெக்டரிடம் வி.சி., கட்சி மனு
கரூர், நவ. 19-
கரூரில் செயல்பட்டு வரும், பாஸ் பாடி நிறுவ னங்களில், பாதுகாப்பு அம் சங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, கரூர் கலெக்டர் அலுவல கத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், வி.சி.க., கரூர் மாநகர மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமையில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்ப தாவது:
கரூரில், நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்ற னர். 90க்கும் மேற்பட்ட பஸ் பாடி கட்டும் நிறுவனங் களில், தீ அணைக்கும் கருவிகள், தீயை அணைக்க தேவையான தண்ணீர் தொட்டி, முறைப்படுத்த மின்சாரம் போன்ற எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, காப்பீடு உள்பட அரசு விதிகளை பின்பற்றாமல் இயங்கி வருகிறது. இது போன்ற பாதுகாப்பு முறைகள் இல்லாத காரணத்தால், கடந்த, 14ல் தான்தோன்றிமலை தனியார் பஸ் பாடி நிறு வனத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகளை நியமனம் செய்து, அந்த நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

