/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
/
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 04, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ஜன. 4-
கரூர் மாவட்ட, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின், 266வது பிறந்த நாள் விழா, தோரணகல்பட்டியில் நேற்று நடந்தது.
வீரபாண்டிய கட்ட பொம்மன் பண்பாட்டு கழக, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, சிலை முன் தேவராட்டம் நடந்தது. இதில், ஏராளமான தொண்டர்கள் தேவராட்டம் ஆடினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், மாவட்ட பொருளாளர் பாலாஜி, இளைஞர் அணி செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் மல்லம்மன், அழகர் உள்பட பலர் பங்கேற்றனர்.