/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகிளிப்பட்டி கிராமத்தில் காய்கறிகள் சாகுபடி பணி
/
மகிளிப்பட்டி கிராமத்தில் காய்கறிகள் சாகுபடி பணி
ADDED : மார் 20, 2024 01:47 AM
கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி கிராமத்தில், காய்கறி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி ஆகிய கிராமங்களில்
விவசாயிகள் கிணற்று நீர் பாசன முறையில் காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது
வெயில் காலம் என்பதால் கிணறுகளில் குறைந்த தண்ணீர் மட்டும் உள்ளது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறைந்த நாட்களில், வருமானம்
தரக்கூடிய காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.
தற்போது
வெண்டைக்காய், கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, காய்களை பறித்து உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்து
வருகின்றனர். வெண்டைக்காய், கத்திரிக்காய்க்கு ஓரளவு வருமானம்
கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

