/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நினைவு ஸ்துாபி முன்புறம் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
/
நினைவு ஸ்துாபி முன்புறம் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : செப் 04, 2025 01:24 AM
கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, ராயனுார் பொன்நகர் அருகே நினைவு ஸ்துாபி உள்ளது. கரூர் கோட்டையை கைப்பற்ற திப்பு சுல்தான் படையினர், ஆங்கிலேயர்களுடன் போரிட்டதை நினைவு கூறும் வகையில், இந்த இடத்தில் நினைவு ஸ்துாபி அமைக்கப்பட்டு உள்ளது.
பழுதடைந்த நிலையில் இருந்த ஸ்துாபியை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டு, மாநகராட்சி பராமரிப்பில் செயல்படுகிறது. ஸ்துாபியின் முன்புறம், பார்க்கிங் ஏரியா போல சிலர் ஆக்கிரமித்து, இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இரவு நேரங்களில், ஒரு சிலர் உள்ளே சென்று மது அருந்தி விட்டு, பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு செல்லும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
எனவே, கரூர் மாநகரில் உள்ள ஸ்துாபியை மீட்கும் வகையில், அப்பகுதியில் உள்ள வாகன ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.