/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் வேலம்பாடி ஊராட்சி இணைப்பு
/
அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் வேலம்பாடி ஊராட்சி இணைப்பு
அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் வேலம்பாடி ஊராட்சி இணைப்பு
அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் வேலம்பாடி ஊராட்சி இணைப்பு
ADDED : ஜன 03, 2025 01:08 AM
அரவக்குறிச்சி, ஜன. 3-
அரவக்குறிச்சி பேரூராட்சியுடன், வேலம்பாடி ஊராட்சி இணைக்கப்பட்டது.
அரவக்குறிச்சியில் இருந்து, 8 கிலோ மீட்டர் தொலைவில் வேலம்பாடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தீரன் நகர், எல்லப்பட்டி, கிரசன்ட் நகர், இச்சிப்பட்டி, மேட்டுப்பட்டி, புதுவாடி, முருகன் நகர், அண்ணா நகர், மோளையாண்டிபட்டி, மண்டையூத்தங்கரை, பாப்பநாயக்கன்பட்டி, சௌந்தராபுரம், தமிழ் நகர் உள்ளிட்ட, 26 சிற்றுார்கள் உள்ளன. மேலும், 1,000 குடிநீர் இணைப்புகள், 25 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், 49 ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன.
இந்நிலையில் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட, 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அதேபோல, 25 பேரூராட்சிகள் புதிதாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இதற்கிடையில் வேலம்பாடி ஊராட்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி உடன் இணைக்கப்பட உள்ளதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.
கடந்த திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் தங்கவேலிடம், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இந்நிலையில், வேலம்பாடி ஊராட்சியை அரவக்குறிச்சி பேரூராட்சி உடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

