/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெண்ணைமலை கோவில் பிரச்னை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வாங்க மறுப்பு
/
வெண்ணைமலை கோவில் பிரச்னை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வாங்க மறுப்பு
வெண்ணைமலை கோவில் பிரச்னை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வாங்க மறுப்பு
வெண்ணைமலை கோவில் பிரச்னை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வாங்க மறுப்பு
ADDED : நவ 05, 2025 01:44 AM
கரூர், கரூர், வெண்ணைமலை கோவில் பிரச்னை காரணமாக, வாக்காளர் கணக்
கெடுப்பு படிவத்தை மக்கள் வாங்க மறுத்து விட்டனர்.
கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடங்களை, உயர்நீதி-மன்றம் மதுரை கிளை உத்தரவின் பேரில், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நேற்று வெண்ணைமலையில் பேங்க் காலனியில் உள்ள கடைகளுக்கு, சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதை கண்டித்து பெண்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதில், கரூர்
வெண்ணைமலையில் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை,
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வழங்கும் பணியை தொடங்கினார். அப்பகுதி மக்கள் போராட்டத்திற்கு சென்று விட்டதால், பல வீடுகள் பூட்டி கிடந்தன.
திறந்திருந்த வீடுகளில், கணக்கெடுப்பு படிவத்தை வாங்காமல் மக்கள் புறக்கணித்து விட்டனர். கோவில் இட பிரச்னையை அரசு தீர்க்கவில்லை. அப்படியிருக்கையில், ஓட்டு போட்டு என்ன நடக்க போகிறது என அவர்கள் கூறினர். இதனால், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் படிவத்தை கொடுக்க முடியாமல் திரும்ப சென்றார்.

