/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெந்தப்பட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
/
வெந்தப்பட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
ADDED : மே 02, 2025 01:50 AM
குளித்தலை,
குளித்தலை அடுத்த, சின்னையம்பாளையம் பஞ்., வெந்தப்பட்டியில் ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் கோவிலில் விழா துவங்கியது. அன்று முதல் இப்பகுதி மக்கள், விரதம் இருந்து அம்மன்களை வழிபட்டு வந்தனர்.
முதல் நாள் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அம்மன் திருவீதி உலா வந்து கோவிலில் குடி புகுந்தது. அம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம், கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், மொட்டை அடித்தல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டுடன், பெண்கள் முளைப்பாரிகளை எடுத்து வீதி உலாவாக வந்து, மாரியம்மனின் திருக்கரகத்தை கோவில் கிணற்றில் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.