/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி: உதயநிதி
/
200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி: உதயநிதி
ADDED : ஜூலை 10, 2025 01:15 AM
கரூர், '' வரும் சட்டசபை தேர்தலில், 200க்கும் அதிகமான தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெறும்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் ராயனுாரில் நடந்தது. அதில் துணை முதல்வரும், மாநில தி.மு.க., இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி
பேசியதாவது:
பூத் கமிட்டி உறுப்பினர்கள்தான், தி.மு.க.,வின் ரத்த நாளங்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று, தி.மு.க., அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். மத்திய அரசின் ஆதரவு இல்லாமல், பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
புதிய உறுப்பினர் சேர்க்கையில், 234 தொகுதிகளில் கரூர் தொகுதி இரண்டாவது இடத்தில் உள்ளது. செய்ய முடியாத பணிகளையும் செய்து காட்டுபவர் செந்தில் பாலாஜி. மற்ற மாவட்டங்களுக்கு, எடுத்துகாட்டாக கரூர் உள்ளது.
மக்களை காப்போம் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கிளம்பி விட்டார். அதை அ.தி.மு.க.,வினரே நம்ப மாட்டார்கள். மக்கள் எப்படி நம்புவார்கள். தமிழக நலனை பா.ஜ.,விடம் அடகு வைத்துவிட்டு, சொகுசு பஸ்சில் பிரசாரம்
செய்கிறார்.
நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டை தட்டவில்லை. தமிழக மக்கள் வீட்டைதான் தேடி உறுப்பினர் சேர்க்க செல்கிறோம். அறநிலையத்துறை நிதியை எடுத்து கல்லுாரி கட்டுவதை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எதிர்த்து பேசுகிறார்.
அதற்கு வரும் தேர்தலில் மாணவ, மாணவியர், பொதுமக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். 10 தோல்வி பழனிசாமியை, 11 தோல்வி பழனிசாமி என, மாற்றி காட்ட வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணிக்கு, வரலாறு காணாத தோல்வியை தர வேண்டும். வரும் தேர்தலில், 200க்கும் அதிகமான தொகுதிகளில், வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் மீண்டும் வருவார்.
இவ்வாறு பேசினார்.
அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் பிரகாஷ், ராஜேஷ் குமார், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோர்
உடனிருந்தனர்.

