/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஏப் 21, 2025 08:16 AM
கரூர்: கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர், பாலவிடுதி, முள்ளிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் விபத்து, தொற்றுநோய் பாதிப்பு போன்றவற்றுக்கு சிகிச்சை பெற, கடவூர் ஆரம்ப சுகாதார நிலையம் தான் செல்ல வேண்டும். அங்கு போதுமான மருத்துவ வசதி இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: மலைப்பகுதியான கடவூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பது இல்லை. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் டாக்டர்கள், சில மணி நேரம் மட்டுமே பணியில் உள்ளனர். அவசர சிகிச்சைக்கு திண்டுக்கல் அல்லது கரூர், மைலம்பட்டி பகுதியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் நோயாளிகள் இறந்து விடுகின்றனர். எனவே, கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.