/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு பிச்சம்பட்டி கிராம மக்கள் மனு
/
100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு பிச்சம்பட்டி கிராம மக்கள் மனு
100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு பிச்சம்பட்டி கிராம மக்கள் மனு
100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு பிச்சம்பட்டி கிராம மக்கள் மனு
ADDED : டிச 17, 2024 01:53 AM
கரூர், டிச. 17-
நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தில், முறையாக வேலை வழங்க வேண்டும் என, பிச்சம்பட்டி கிராம மக்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பிச்சம்பட்டி பஞ்சாயத்தில், 1,500க்கும் மேற்பட்டவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில், 500 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் முறையாக வழங்கப்படவில்லை. இங்குள்ள அனைவரும், எழை, நடுத்தர மக்கள் தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வானம் பார்த்த பூமியாக இருப்பதால், விவசாய வேலை கிடைக்காது. இங்குள்ளவர்களுக்கு, 100 நாள் வேலை திட்டம் வாழ்வாதாரமாக உள்ளது. இது குறித்து பலமுறை மனு கொடுத்தும், பஞ்., ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.