/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் அருகில் கிறிஸ்தவ இடுகாடு அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ADDED : டிச 30, 2025 05:10 AM

கரூர்: கோவில் அருகில் கிறிஸ்தவ இடுகாடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, க.பரமத்தி அருகில் ஆண்டிப்பட்டி கிராம மக்கள், கரூர் கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம் க.பரத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட குப்பம் பஞ்சாயத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதியில், 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இந்த ஊர் பகுதிக்கென்று சொந்தமாக சுடுகாடு இல்லாமல், 1 கி.மீ., தொலைவில் சென்றுதான் இறுதிச்சடங்கு செய்து வருகின்றோம். இப்பகுதியில், சுடுகாடு அமைத்து தர வேண்டும். இதுமட்டுமல்லாது, இக்கிராம சுற்றுப்புறங்களில் பெரும்பான்மை சமுதாயத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு, அரசுக்கு சொந்தமாக, 4.5 ஏக்கர் நிலம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மூலம், அந்த இடத்தை கிறிஸ்தவர் தரப்பிற்கு இடுகாடு அமைத்து கொள்ள ஒதுக்கீடு செய்யப்படுவதாக, வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த இடுகாடு அமைய உள்ள இடம் அருகில் எல்லை கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இதனால், அங்கு இடுகாடு அமைத்து கொடுப்பதினால் எதிர்வரும் காலங்களில், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்.
இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.