/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
/
மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
மகிளிப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
ADDED : ஆக 31, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:மகிளிப்பட்டி கிராமத்தில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் திருத்தேரில் திருவீதி உலா பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 21
அடி உயர திருத்தேரில், 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து
பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தேரில் வைக்கப்பட்ட
விநாயகர் சிலை மகிளிப்பட்டி பாலம், புது தொட்டியப்பட்டி,
உடையந்தோட்டம் உள்ளிட்ட ஊர்களின் வழியாக திருவீதி உலாவாக கொண்டு
செல்லப்பட்டது. ஏராளமானோர் விநாயகரை வழிபட்டனர். பின்
அன்னதானம் வழங்கப்பட்டது.