/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு; 79,690 வாக்காளர்கள் நீக்கம்
/
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு; 79,690 வாக்காளர்கள் நீக்கம்
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு; 79,690 வாக்காளர்கள் நீக்கம்
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு; 79,690 வாக்காளர்கள் நீக்கம்
ADDED : டிச 20, 2025 07:19 AM

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில், 8 லட்சத்து, 18 ஆயிரத்து, 672 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடந்தது. முதல் கட்டமாக கடந்த அக்., 27 முதல் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களுக்கு, கணக்கீட்டு படிவங்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம் கடந்த நவ., 4 முதல் வழங்கப்பட்டது.
பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், மூன்று லட்சத்து, 94 ஆயிரத்து, 44 ஆண்கள், நான்கு லட்சத்து, 24 ஆயிரத்து, 546 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், 82 பேர் உள்பட, எட்டு லட்சத்து, 18 ஆயிரத்து, 672 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியில், 90,490 ஆண்கள், 99,203 பெண்கள், நான்கு மூன்றாம் பாலினத்தவர் உள்பட, ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 697 பேர் உள்ளனர்.
கரூர் தொகுதியில், 1,02,226 ஆண்கள், 1, 14,512 பெண்கள், 39 மூன்றாம் பாலினத்தவர் உள்பட, இரண்டு லட்சத்து, 16 ஆயிரத்து, 777 பேர் உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் தொகுதியில், 95,893 ஆண்கள், ஒரு லட்சத்து, 826 பெண்கள், 32 மூன்றாம் பாலினத்தவர் உள்பட, ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 751 பேர் உள்ளனர்.
குளித்தலை தொகுதியில், 1,0,5,435 ஆண்கள், 1,10,005 பெண்கள், ஏழு மூன்றாம் பாலினத்தவர் உள்பட, இரண்டு லட்சத்து, 15 ஆயிரத்து, 447 பேர் உள்ளனர்.
முகவரி இல்லாதவர்கள், 9,844 பேர், குடியிருப்பு மாறியவர்கள், 43 ஆயிரத்து, 576 பேர், இறந்தவர்கள், 23 ஆயிரத்து, 829 பேர், இரட் டை பதிவு, 2,295 பேர், பிறர், 146 என, 79 ஆயிரத்து, 690 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று முதல் வரும் ஜன., 18 வரை பெயர்களை சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் மாற்று புதிய அடையாள அட்டை பெற மனு செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது.
மனுவுடன் உறுதிமொழி படிவம் மற்றும் உரிய ஆதார ஆவணங்கள் இணைந்து அளிக்க வேண்டும், பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக விசாரணைகள் மேற்கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும், பிப்., 17 ல் வெளியிடப்படும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் தங்கவேல் வெளியிட்டார். டி.ஆர்.ஓ., விமல்ராஜ், சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாநகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

