/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: இதுவரை 17,210 மனுக்கள் அளிப்பு
/
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: இதுவரை 17,210 மனுக்கள் அளிப்பு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: இதுவரை 17,210 மனுக்கள் அளிப்பு
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: இதுவரை 17,210 மனுக்கள் அளிப்பு
ADDED : நவ 25, 2024 02:34 AM
கரூர்: கரூரில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாமை, தமிழக கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான மகேஸ்-வரி, நேற்று ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரும், 2025ம் ஆண்-டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த மாதம், 29 முதல் வரும், 28 வரை நடக்கிறது. இதுதொடர்பாக, கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதி-களில் உள்ள, 1,055 ஓட்டுச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்-டியல் கடந்த மாதம், 20ல் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்து வருகிறது. நேற்று, கரூர் அருகே தான்தோன்றிமலை காளியப்-பனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாக்காளர் பட்-டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமை, கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலரும், வாக்காளர் பட்-டியல் பார்வையாளருமான மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, கலெக்டர் தங்கவேல், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநக-ராட்சி ஆணையாளர் சுதா, ஆர்.டி.ஓ., முகமது பைசல், தேர்தல் பிரிவு தாசில்தார் முருகன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர். சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றத்துக்காக இதுவரை, 17,210 மனுக்கள் வந்துள்ளன. அதன் மீது, வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு எடுக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்-டியல் வரும் ஜன., 6ல் வெளியாக உள்ளது.