/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., சார்பில் வாக்காளர் சரி பார்க்கும் பணி தொடக்கம்
/
அ.தி.மு.க., சார்பில் வாக்காளர் சரி பார்க்கும் பணி தொடக்கம்
அ.தி.மு.க., சார்பில் வாக்காளர் சரி பார்க்கும் பணி தொடக்கம்
அ.தி.மு.க., சார்பில் வாக்காளர் சரி பார்க்கும் பணி தொடக்கம்
ADDED : ஜூன் 11, 2025 01:55 AM
கரூர் கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் வாக்காளர்களை சரி பார்க்கும் பணி கள் நேற்று தொடங்கின.
தமிழகம் முழுவதும், ஓட்டுச்சாவடி வாரியாக வாக்காளர்களை சரிபார்க்கும் பணிகளில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் இ.பி.எஸ்., அறிவித்திருந்தார். அதன்படி, கரூர் மாவட்டத்தில் அரவக்
குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, புகழூர் நகராட்சியில், வார்டு வாரியாக உள்ள ஓட்டுச்சாவடிகளில், இடம் பெற்றுள்ள வாக்காளர்களை சரி பார்க்கும் பணிகளை, மாவட்ட அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, புகழூர் நகர அ.தி.மு.க., செயலர் விவேகானந்தன், ஒன்றிய செயலர்கள்
கமலகண்ணன், மார்க்கண்டேயன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.