வி.பி.-ஜி., ராம் ஜி திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வி.பி.-ஜி., ராம் ஜி திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 06, 2026 04:51 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த ஆர்ச்சம்பட்டி பஞ்.,ல் வி.பி-.ஜி., ராம் ஜி திட்டம் குறித்து
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வழங்குதல் மற்றும் உறுதிமொழி
ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆர்ச்சம்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு,
தோகைமலை ஏ.பி.டி.ஓ., பாஸ்கரன் தலைமை வகித்தார். பஞ்.,
அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில், விழிப்புணர்வு
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் தங்களது கைகளில்
ஏந்தியபடி கோஷம் எழுப்பி சென்றனர். பின், ஊராட்சி மன்ற அலுவலக
வளாகத்தில் நடந்த கருத்தரங்கில், தோகைமலை ஏ.பி.டி.ஓ., பாஸ்கரன்
பேசினார். அப்போது, ''ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வி.பி.-ஜி., ராம் ஜி
திட்டம் என்ற பெயரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம்,
2026-27ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும்
அமல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல், ஆர்ச்சம்பட்டி கிராமத்திலும்
வி.பி.-ஜி., ராம் ஜி திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த புதிய
திட்டம் மூலம் ஆண்டுக்கு, 125 நாட்கள் வேலை வழங்கப்பட உள்ளது. புதிய
திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்கப்பட்டு
வருகிறது,'' என்றார்.
