/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
/
கரூர் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 23, 2024 02:38 AM
கரூர்;கரூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமைவகித்தார். வருவாய்த்துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க தனி துணை தாசில்தார் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டம் நடந்தது.கரூர் மாவட்டத்தில் உள்ள புகலுார், மண்மங்கலம், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகங்களில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் ஒரு நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.