/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிழற்கூடம் இல்லாத வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்: பொதுமக்கள் கடும் அவதி

ADDED : ஏப் 28, 2024 04:16 AM
கரூர்,: கரூர்--நாமக்கல் மாவட்டம், மோகனுார் சாலையில் வாங்கல் அக்ரஹாரம் என்ற இடம் உள்ளது. அந்த பகுதியில் கோவில்கள், கால்நடை மருத்துவமனை, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ஏராளமன வீடுகள் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல், மோகனுார் மற்றும் திருச்சி மாவட்டம் காட்டு புத்துார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல, வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ்களில் ஏறி செல்ல வேண்டும். அதே போல், கரூர் நகர பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கும், பஸ்களில் வந்தாக வேண்டும்.
ஆனால், வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பின் இரண்டு பகுதியிலும் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டு மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த பகுதியில் நிழற்கூடம் கட்டிதரக்கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.