/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் வார்டு கமிட்டி கூட்டம்
/
கிருஷ்ணராயபுரத்தில் வார்டு கமிட்டி கூட்டம்
ADDED : டிச 11, 2024 01:44 AM
கிருஷ்ணராயபுரத்தில் வார்டு கமிட்டி கூட்டம்
கிருஷ்ணராயபுரம், டிச. 11-
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சார்பில், வார்டு கமிட்டி கூட்டம் நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். இதில், டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் உள்ள மக்களை நேரில் சந்திந்து, சபா வார்டு கமிட்டி கூட்டம் மூலம், மக்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டு, அதன் மூலம் தேவையான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நேற்று டவுன் பஞ்சாயத்து நான்காவது வார்டில் வசிக்கும் மக்களுக்கு, சபா வார்டு கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. நான்காவது வார்டு கவுன்சிலர் ராதிகா, கிருஷ்ணராயபுரம் மேல்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் ரத்தினம், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.