/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாசி பெரியசாமிக்கு திருநீரு அலங்காரம்
/
மாசி பெரியசாமிக்கு திருநீரு அலங்காரம்
ADDED : அக் 21, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், முத்துக்காப்பட்டி பஞ்., கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பையில் பிரசித்தி பெற்ற மாசி பெரியசாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் தினந்தோறும், ஆடு, கோழி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். விசேஷ நாட்களில் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி, மாசி பெரியசாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி, சுவாமிக்கு உச்சிகால பூஜையாக, திருநீரு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.