/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வாழை தோட்டத்தை நாசம் செய்த தண்ணீர்
/
கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வாழை தோட்டத்தை நாசம் செய்த தண்ணீர்
கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வாழை தோட்டத்தை நாசம் செய்த தண்ணீர்
கூட்டு குடிநீர் குழாய் உடைந்து வாழை தோட்டத்தை நாசம் செய்த தண்ணீர்
ADDED : ஆக 10, 2025 01:24 AM
குளித்தலை, குமாரமங்கலத்தில், சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, வாழை தோட்டத்தில் புகுந்தது மட்டுமின்றி, நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குளித்தலை அடுத்த மருதுார் காவிரி ஆற்று பகுதியிலிருந்து, ஐந்து பெரிய போர்வெல்கள் மூலம், காவிரி குடிநீர் சேகரித்து ராட்சத குழாய் மூலம், சிவகங்கை-காவிரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, சிவகங்கை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று காலை, 11:50 மணியளவில் குமாரமங்கலம் கருப்பண்ணசாமி கோவில் செல்லும் பிரிவில், பணிக்கம்பட்டி நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் செல்லும் குழாயில், திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒன்றரை மணி நேரமாக, 10 அடி துாரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர் அருகில் இரு
ந்த விவசாயி அண்ணாதுரை என்பவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் நான்கரை ஏக்கர் தோட்டம் நீரில் மூழ்கியது. மேலும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது.இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும், குமாரமங்கலம் சாலையில் உடைப்பும் ஏற்பட்டு, வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனக்கு உரிய நஷ்டயீடு வழங்க வேண்டும் என, விவசாயி அண்ணாதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். மதியம், 2:30 மணிக்கு சம்பந்தப்பட்ட இடத்தை ஒப்பந்த பணி பொறியாளர் பார்வையிட்டு சென்றார்.