/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
/
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
ADDED : டிச 18, 2024 01:54 AM
கரூர், டிச. 18-
அமராவதி அணைக்கு நேற்று, தண்ணீர் வரத்து குறைந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,483 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 1,785 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர் மட்டம், 87.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,663 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 150 கன அடி தண்ணீரும் திறக்கப்
பட்டது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 16 ஆயிரத்து, 436 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 10 ஆயிரத்து, 160 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், 9,660 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 25 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.33 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு
நிறுத்தப்பட்டுள்ளது.