/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : நவ 04, 2025 01:04 AM
கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.
மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் வினாடிக்கு, 16 ஆயிரத்து, 500 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே உள்ள மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 12 ஆயிரத்து, 748 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 15 ஆயிரத்து, 602 கன அடியாக அதிகரித்தது.
அதில், 14 ஆயிரத்து, 132 கன அடி தண்ணீர் டெல்டா பாசன பகுதிக்காக, காவிரி யாற்றில் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில், 1,470 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 29.44 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 21.71 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

