/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
/
மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
ADDED : அக் 08, 2025 01:50 AM
கரூர், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 17,556 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 16,795 கன அடியாக குறைந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு, 15,675 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 9 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்: கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில், தோகைமலையில் மட்டும், 17.20 மி.மீ., மழை பெய்தது