/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஞ்., நிர்வாகத்தை கண்டித்து மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
/
பஞ்., நிர்வாகத்தை கண்டித்து மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
பஞ்., நிர்வாகத்தை கண்டித்து மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
பஞ்., நிர்வாகத்தை கண்டித்து மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 08, 2025 01:50 AM
குளித்தலை குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்., நெய்தலுார் காலனி, 6வது வார்டில், சுடுகாட்டிற்கு செல்ல தார்ச்சாலை வசதி, மின்விளக்கு, தண்ணீர் வசதி, இறந்தவர்களை புதைப்பதற்கான மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட அடிப்படை வசதிகளை செய்து தராத, பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், பஞ்., அலுவலகம் முன், நேற்று காலை, 10:30 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.
தோகைமலை யூனியன் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக மயானம் சரி செய்து கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வரும், 11ல் தார்ச்சாலை, மின்விளக்கு, தண்ணீர் வசதிக்கு போர்வெல் உள்ளிட்ட பணிகள் செய்து தரப்படும் என, உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பணிகள் நடைபெறாத பட்சத்தில், 13ல் மா.கம்யூ., கட்சி சார்பில், மயானத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம் என, தெரிவித்தனர்.