/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு சோளம் வயல்களில் புகுந்த தண்ணீர்

ADDED : ஏப் 30, 2025 01:08 AM
கரூர்:
கரூர் அருகே, குழாய் உடைந்து சோளம் பயிரிட்டுள்ள வயல்களில் தண்ணீர் புகுந்தது.
கரூர் மாவட்டம், கட்டளை காவிரியாற்று பகுதியில் இருந்து, பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு, நீரேற்று நிலையங்கள் மூலம், நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் வழியாக, குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வீரராக்கியம் பிரிவில், சாலையோரம் செல்லும் குழாய் கடந்த, சில நாட்களுக்கு முன் உடைந்தது.
இதனால், அதிலிருந்து வெளியேறிய குடிநீர், சோளம் பயிரிட்டுள்ள வயல்களில் புகுந்து தேங்கி நிற்கிறது. ஏற்கனவே, கோடை மழை பெய்த நிலையில், சோளம் பயிரிட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், நீரேற்று நிலையத்தில் புகார் செய்தும், குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை.
அக்னி நட்சத்திரம் மே., 4ல், தொடங்குகிறது. எனவே, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, வீரராக்கியம் அருகே உடைந்துள்ள, குழாயை சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.