/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் இருந்து பாசன வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்
/
அமராவதி அணையில் இருந்து பாசன வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்
அமராவதி அணையில் இருந்து பாசன வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்
அமராவதி அணையில் இருந்து பாசன வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்
ADDED : டிச 28, 2024 01:56 AM
கரூர்: அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் திறக்-கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 313 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 283 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 89.51 அடியாக இருந்தது. அணையில் இருந்து, அம-ராவதி ஆற்றில் வினாடிக்கு, 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்-டது. அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு காரணமாக, புதிய பாசன வாய்க்காலில், நேற்று தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்-டது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 3,068 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,220 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில் காவிரி யாற்றில், 420 கன அடி தண்ணீரும், மூன்று பாசன கிளை வாய்க்காலில், 800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப் பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 12 கன அடி வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்-மட்டம், 25.05 அடியாக இருந்தது.
பொன்னனியாறு அணை
கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 38.92 அடியாக இருந்தது.

