/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
/
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
ADDED : நவ 26, 2024 01:06 AM
அமராவதி அணையில்
தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கரூர், நவ. 26-
மழை காரணமாக அமராவதி அணையில் இருந்து ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 327 கன அடி தண்ணீர் வந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து, 215 கன அடியாக குறைந்தது. மேலும், ஆற்றுப்பகுதிகளில் மழை காரணமாக, அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.67 அடியாக இருந்தது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,659 கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 639 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9 கனஅடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.89 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 75 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.