/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் வந்தடைந்தது
/
அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் வந்தடைந்தது
அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் வந்தடைந்தது
அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று கரூர் வந்தடைந்தது
ADDED : ஜூன் 22, 2025 01:26 AM
கரூர், அமராவதி அணை யில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று அதிகாலை கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்தது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரத்து குறைவால் வினாடிக்கு, 1,792 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணையில் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 1,363 அடியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வந்தது.அங்கிருந்து, தடுப்பு மற்றும் ஷட்டர்கள் மூலம் வெளியேறிய தண்ணீர் நேற்று மதியம் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதிக்கு வந்தது. அப்போது, அமராவதி ஆற்றின் புதிய பாலத்தில் பொதுமக்கள் நின்றபடி, ஆற்றில் தண்ணீர் செல்வதை மகிழ்ச்சி யுடன் பார்த்து ரசித்தனர்.